இலங்கையின் ஏற்றுமதியில் வலுவான ஆரம்பம்
2025 ஜனவரி மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 1.334 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளது.
குறித்த ஏற்றுமதி வருவாய் இந்த ஆண்டிற்கான ஒரு வலுவான ஆரம்பத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், 2024 ஆம் ஆண்டின் ஜனவரி மாத வருவாயுடன் ஒப்பிடும் போது 10.3% அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்றுமதி செயல்திறன்
ஏற்றுமதி மேம்பாட்டு சபையின் கூற்றுப்படி, ஜனவரி 2025 இல் வணிகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் இருந்ததுடன், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 3.51% அதிகரிப்பைக் காட்டியுள்ளது.
ஆடைகள் , தேயிலை, தேங்காய் சார்ந்த பொருட்கள், வைரங்கள், ரத்தினக் கற்கள் மற்றும் ஆபரணங்கள், மசாலாப் பொருட்கள், உணவு மற்றும் பானங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியிலிருந்து கிடைத்த வருவாய் அதிகரிப்பே வணிகப் பொருட்களின் ஏற்றுமதியில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது.