ஆளும் தரப்பு எம்.பிக்கள் இருவரை அதிரடியாக கைது செய்த அதிகாரிகள்!
இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மீது தாக்குதல்கள் நடத்தியது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் நிலான் ஜயதிலக ஆகியோர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி முகத்திடம், ஜனாதிபதி செயலகம் முன், அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் போதுமான சாட்சியங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதன் அடிப்படையில் 22 சந்தேகநபர்களை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தினால், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறு கைது செய்யப்படும் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கைது செய்வதற்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்த 22 சந்தேகநபர்களில் இவர்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.