ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு பணிகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போது, ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றன.
இதன்படி, ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சட்டம் மீறல் மற்றும் வன்முறை தொடர்பில் நேற்றைய தினம் 51 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் சட்டம் மீறல் குறித்து தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 25 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 26 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன.