பண்டிகை காலம் ; காலி முகத்திடலில் பொதுமக்களுக்கு விசேட உதவி மையம்!
பண்டிகை காலத்தை முன்னிட்டு காலி முகத்திடலில் பொது மக்களுக்கான விசேட உதவி மையம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.
குறித்த பகுதியில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இன்று (21) முதல் காலி முகத்திடலின், ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இந்த உதவி மையம் ஸ்தாபிக்கப்பட்டவுள்ளது.

இந்த உதவி மையம், பொதுமக்களுக்கான அவசர நிலைமைகள் அல்லது எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்படும் போது உடனடி உதவி, வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்பை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளுக்கு மேலதிகமாக, மருத்துவ அவசர நிலைமைகளை கையாளவும் தேவையான போது முதலுதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் நோயாளர் காவு வண்டி சேவைகள் மற்றும் அடிப்படை மருத்துவ உதவிகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக, பொதுமக்கள் உதவி மையம், அவசர ஒருங்கிணைப்பு, நோயாளர் காவு வண்டி சேவைகள் மற்றும் பாதுகாப்பு உதவிக்காக 071 859 5880 என்ற தொலைபேசி இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.