கில்மிஷாவை பாராட்டிய ஜனாதிபதி... முல்லைத்தீவு தங்க பெண்ணை மறந்தது ஏன்?
வடக்கு மாகாணத்திற்கு 4 நாட்கள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் (04-01-2024) யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து தொடர் நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது, தென்னிந்திய பாடல் போட்டி நிகழ்ச்சியில் வெற்றிப்பெற்ற ஈழத்து குயில் கில்மிஷா ஜனாதிபதி ரணிலுடன் ஃசெல்பி எடுத்துகொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் அதிகம் பிகிரப்பட்டு வருகின்றது.
இதேவேளை, இதற்கு முன்னர் இந்தோனிசியாவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி 72 வயதில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த முல்லைத்தீவு பெண்ணை ஜனாதிபதி என் பாராட்டவில்லை என சமூக ஆர்வலர் தோழன் பாலன் என்பவர் முகநூலில் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் முகநூலில் ஈட்ட பதிவில்,
இருவரும் பெண்கள், இருவரும் ஈழத் தமிழர்கள். ஒருவர் இந்திய தொலைக்காட்சி நடத்திய பாட்டுப்போட்டியில் பங்குபற்றி பரிசு பெற்றவர்.
இன்னொருவர் இந்தோனிசியாவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றி பதக்கம் பெற்றவர். இருவரும் சாதனையாளர்கள்தான்.
இருப்பினும், பாட்டுப் போட்டியில் பெற்ற பரிசைவிட வயதானவர்களுக்கான ஓட்டப்போட்டியில் நாட்டுக்காக பெற்ற பதக்கம் மதிப்பு மிக்கது.
ஆனால் ஜனாதிபதியோ பாட்டுப்போட்டியில் பரிசு பெற்றவரை பாராட்டியது போன்று நாட்டுக்காக ஓட்டப்போட்டியில் பதக்கம் பெற்றவரை பாராட்டவில்லை.
ஏனெனில் இதுதான் சமூக ஊடகங்களின் சக்தி. ஒருவேளை ஓட்டப்போட்டியில் பதக்கம் பெற்றவர் சமூக ஊடகங்களில் புகழப்பட்டிருந்தால் ஜனாதிபதி அவருடன் சேர்ந்து போட்டோ பிடித்திருப்பாரோ? என முகநூலில அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.