தமிழனத்திற்காக குரல் கொடுத்தவர் சுட்டுகொல்லப்பட்ட நாள் இன்று!
இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், வழக்கறிஞருமான குமார் பொன்னம்பலம் சுட்டுகொல்லப்பட்ட தினமான இன்று அவருக்கு முகநூலில் தோழன் பாலன் உட்பட பலர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
கடந்த 2000 ஆண்டு ஜனவரி 5 ம் திகதி கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் இனந்தெரியாதோரால் குமார் பொன்னம்பலம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
குமார் பொன்னம்பலத்தின் நினைவு தினமான இன்று தோழன் பாலன் என்பவர் முகநூலில் ஈட்ட பதிவு,
கொழும்பில் நீலன் திருச்செல்வம் கொல்லப்பட்டதால் ஆத்திரமுற்ற ஜனாதிபதி சந்திரிக்கா உத்தரவில் குமார் பொன்னம்பலம் கொல்லப்பட்டதாக அப்போது பேசப்பட்டது.
அது எந்தளவுக்கு உண்மை எனறு தெரியாது. ஆனால் இக் கொலையில் மொரட்டுவ தாதா ஒருவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரும் கொல்லப்பட்டுவிட்டார்.
குமார் பொன்னம்பலம் அவர்களின் கொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. இனியும் கிடைக்குமா என்று தெரியவில்லை. குமார் பொன்னம்பலம் அவர்கள் அந்த நேரம் அந்த இடத்திற்கு ஏன் வந்தார் என்ற என் கேள்விக்கும் இதுவரை விடை கிடைக்கவில்லை.
கொழும்பில் இருந்துகொண்டு தமிழினத்திற்காக குரல் கொடுத்தவருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என முகநூலில் அவர் பதிவிட்டுள்ளார்.