மக்களுக்கு லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!
இலங்கையில் நாளையதினம் (24-05-2022) எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், நாளைய தினம் 12 தசம் 5 கிலோகிராம், 5 கிலோகிராம் மற்றும் 2 தசம் 3 கிலோமிகராம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே நாளைய தினம் எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதற்காக வரிசைகளில் நிற்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன் இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான 6.5 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவு இன்று செலுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பல்கள் மூலம் 7,500 மெற்றிக் டன் எரிவாயு நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளது.
இதன் முதலாவது கப்பல் 3,500 மெற்றிக் டன் எரிவாயுவுடன் எதிர்வரும் வியாழக்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.