அமைச்சர் பசிலின் அதிரடி முடிவு: புத்தாண்டு கொண்டாட பொதுமக்களுக்கான மகிழ்ச்சி தகவல்
புதிய வரவு செலவுத் திட்டத்தை அமைச்சரவை இணக்கம் தெரிவித்தால் சமர்ப்பிக்க முடியுமென நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.
புதிய வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டால், எதிர்வரும் ஏப்ரல் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொதுமக்களுக்கு பல சலுகைகளை வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சலுகைகளுடன் புதிய வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க நிதியமைச்சர் என்ற வகையில் சம்மதிப்பதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தில் திருத்தம் செய்து மீண்டும் சமர்ப்பிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் முன்மொழிந்துள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.