இராஜாங்க அமைச்சு பெறுப்பை ஏற்க மறுக்கும் தியாநாயக்க!
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க (S. B. Dissanayake) இராஜாங்க அமைச்சு பதவியை ஏற்பதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வகித்த அமைச்சு பொறுப்புகளை எஸ்.பி. திஸாநாயக்கவிடம் கையளிப்பதற்கு எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரச மேல் மட்டத்திலிருந்து எஸ்.பி. திஸாநாயக்கவிடம் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், இராஜாங்க அமைச்சு பதவியை ஏற்பதற்கு எஸ்.பி. திஸாநாயக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக அறியமுடியகின்றது.
இதேவேளை, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவியொன்றையே எஸ்.பி. திஸாநாயக்க எதிர்ப்பார்க்கின்றார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.