சிறைச்சாலைக்குள் அரங்கேறிய கொலை முயற்சி ; சிகிச்சையில் கைதி
சிறைச்சாலைகளில் தங்கள் போட்டியாளர்களை படுகொலை செய்ய பாதாள உலகக் குழுக்கள் தற்போது முயற்சித்து வருவதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்குள், தேவுந்தர விஷ்ணு கோவிலுக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞனின் சகோதரனை, கூரிய ஆயுதத்தால் தாக்கி, இரண்டு கைதிகள் கொல்ல முயன்ற சம்பவம் பதிவாகியுள்ளது.

கைதி காயம்
ஒரு கைதி காயமடைந்து தங்காலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தாக்கப்பட்ட நபர், சமீபத்தில் தேவுந்தர விஷ்ணு கோவிலுக்கு அருகில் கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்களில் ஒருவரின் சகோதரர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சிறையில் உணவுக்காகப் பயன்படுத்தப்படும் அலுமினியத் தட்டில் இருந்து வடிவமைக்கப்பட்ட கூர்மையான ஆயுதத்தால் கைதிகள் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், இரண்டு கைதிகளும் தற்போது தனித்தனி அறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.