மூன்று அமைச்சர்கள் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி பதில்!
அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை பாதுகாத்துக் கொள்ள முடியாத அமைச்சர்கள் இருப்பின் அவர்கள் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்வது மிகவும் பொருத்தமானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.
நேற்று (27-12-2021) திங்கட்கிழமை ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை சந்தித்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
யுகதனவி மின் உறிபத்தி உடன்படிக்கைக்கு எதிராக அரசாங்க அமைச்சர்கள் மூவரினால் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கை தொடர்பில் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் ஜனாதிபதியிடம் வினவியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை பாதுகாப்பது அமைச்சர்களின் பொறுப்பாகும் எனவும் அது முடியாத பட்சத்தில் அமைச்சரவையில் இருந்து விலகுவதே சிறந்தது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.