இலங்கையில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு இதற்கும் கடுமையான தட்டுப்பாடு!
நாட்டிற்கு தேவையான மருந்துகளை சர்வதேச நிறுவனங்களின் நிதியைப் பயன்படுத்தி கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன (Channa Jayasumana) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எனினும், அவற்றினை இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் கொடுக்கப்பட்டால், 80 நாட்களுக்கு மருந்து தட்டுப்பாடு இருக்கும் என்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், பாதிப்பை குறைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டினால் எவ்வித உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும் சன்ன ஜயசுமன கூறினார்.
இலங்கையில், மருத்துவ பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக பலர் உயிரிழக்கக்கூடிய சூழ்நிலையை நோக்கி நாடு சென்றுகொண்டிருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
மாரடைப்புக்கு சிகிச்சையளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் முக்கியமான மருந்துகள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு சுவாசிக்க உதவும் குழாய்களுக்கு பற்றாக்குறை காணப்படுகின்றது.