இலங்கையில் ஜூன் மாத பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக, கடந்த ஜூன் மாதத்தில் இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் 6.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணவீக்கம்
இதன்படி மே மாதத்தில் 5.4 சதவீதமாக இருந்த பணவீக்கம், ஜூன் மாதத்தில் 6.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அத்துடன் மே மாதத்தில் 1.5 சதவீதமாகப் பதிவான உணவுப் பணவீக்கம், ஜூன் மாதத்தில் 3.3 சதவீதமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், உணவு அல்லாத பணவீக்கமும் 8.6 சதவீதத்திலிருந்து 9.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாகத் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.