அக்காவின் கணவருடன் தகாத உறவு ; வருங்கால கணவருக்கு இளம்பெண் நிகழ்த்திய கொடூரம்
அக்கா கணவர் மீது ஏற்பட்ட மோகத்தால் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த வருங்கால கணவரை கொன்ற இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஜமுவா சோக் பகுதியைச்சேர்ந்த இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

கொடூரமாக கொலை
இந்நிலையில்,இளம் பெண்ணுக்கும் அவரது சகோதரியின் கணவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
எனவே தனக்கு திருமணம் நடந்து விட்டால் தனது அக்கா கணவருடன் இருக்க முடியாது என நினைத்து கள்ளக்காதலர்கள் இருவரும் சேர்ந்து எதிர்கால கணவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.
அதன்படி இளம் பெண் தனது வருங்கால கணவர் பீகார் எல்லையோரத்தில் உள்ள பேலா வனப்பகுதிக்கு தனியாக வரும்படி அழைத்துள்ளார். இதை நம்பிய இளைஞன் குறிப்பிட்ட வனப்பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு ஏற்கனவே இவருக்காக காத்திருந்த அவர்கள் இருவரும் இணைந்து, குறித்த இளைஞனை கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளனர். பின்னர்,இருவரும் நீரஜின் உடலை வனப்பகுதியில் விட்டுச்சென்றுள்ளனர்.
இதற்கிடையே காணாமல் போனதை அறிந்து அவரதுகுடும்பத்தினர் பொலிஸில் புகார் அளித்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் பொலிஸார் கள்ளக்காதலர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.