இலங்கை எதிர்கொண்டுள்ள பாரிய பிரச்சனைகள்! எம்.பி
உலக நாடுகள் முகம் கொடுக்கும் பாரிய பிரச்சினைகளை நமது நாடும் இன்று முகம் கொடுத்து வருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார (Jagath Kumara) தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் மீது நடக்கும் போர்ச் சூழ்நிலையால், சிறு விடயங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளிடையேயும் இலங்கையின் தொடர்பு காணப்படுகிறது. தற்போது அத் தொடர்பு தடைபட்டுள்ளது. முக்கியமான தேயிலை ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்க்கட்சி கூறுவது நாங்கள் எதுவும் செய்யவில்லை என்று பட்டதாரிகளுக்கு வேலை தர முடியவில்லை என்று. கொரோனா தொற்று காரணத்திலும் நாம் பல செயற்திட்டங்களை மக்களிற்கு செய்துள்ளோம். கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
வெளி நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர் கட்சி கூறுவது கொரோனா தொற்று முன்னிலைப்படுத்தி அனைத்து பிரச்சினைகளையும் கூறுகிறோம் என்று, அதுதான் உண்மை.
துரதிர்ஷ்டவசமாக மின் துண்டிப்பு ஏற்பட காரணமாக சில சிக்கல்கள் உள்ளன
எனினும் இதற்காக தீர்வுகளை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) மற்றும் ஜனாதிபதியே கோட்டாபய ராஜபக்ஷ (2Gotabaya Rajapaksa) எடுப்பார்கள் என்றார்.