அபாயகரமான சிவப்பு வலயமாக காணப்படும் இலங்கை! இன்று முக்கிய தீர்மானம்
எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்களை நீடிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தின் போது எடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இலங்கை விசேட வைத்தியர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை விடுத்து நாட்டில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை மேலும் நீடிக்க வேண்டுமென கோரியுள்ளது.
இலங்கை கொரோனா பரவலில் சிவப்பு வலயத்தில் உள்ளதாகவும் இது பச்சை வலயமாக மாறும் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று இடம்பெறும் கூட்டத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலும், சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான வயதெல்லை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.