கைதிகள் தொடர்பில் இலங்கை - ஈரான் எடுத்துள்ள முடிவு!
ஈரான் - இலங்கை தங்களது கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ் விடயங்கள் ஈரான் நாட்டிற்கு விஜயம் செய்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடனான Ali Sabry சந்திப்பின் போது அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய மனிதாபிமான அடிப்படையில் விரைவில் ஈரான் மற்றும் இலங்கை கைதிகள் விடுதலை செய்பய்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், ஆசிய நாடுகள் மீது உலக சக்திகள் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கியுள்ளதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் ஓமர் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் இணக்கப்பாடு காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.