வாகன இறக்குமதி; வெளியான அறிவிப்பு
வாகன இறக்குமதிகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், இலங்கை வர்த்தக சம்மேளனம், 6 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முக்கிய வெளியீடான 'மோட்டார் வாகனத் துறை அறிக்கை 2025/26'ஐ வெளியிட்டுள்ளது.
இலங்கையின் வாகனத் துறை ஒரு புதிய கட்டத்திற்குள் பிரவேசிப்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. மோட்டார் வாகன இறக்குமதி மூலம் சுங்க வரிகளாக ரூ. 896.4 பில்லியன் வருவாய் கிடைத்துள்ளது.

15க்கும் மேற்பட்ட உள்நாட்டு வாகன இணைப்பு ஆலைகள் இயங்கி வருவதோடு, குறைந்தபட்சம் 20% உள்ளூர் மூலப்பொருட்களைப் பயன்படுத்தும் கொள்கை காரணமாக வேலைவாய்ப்புகளும் உள்நாட்டு மதிப்புக் கூட்டலும் அதிகரித்துள்ளன.
2026 ஆம் ஆண்டின் முதல் 06 மாதங்களில் மாத்திரம் 3,27,000க்கும் அதிகமான புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உலகளவில் விற்பனையாகும் புதிய சிற்றூந்துகளில் நான்கில் ஒன்று மின்சார வாகனமாகும்.
இதன் விற்பனை முதன்முறையாக 20 மில்லியனைக் கடந்துள்ளது. அதேசமயம் வாகனப் பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளில் AI பயன்பாடு, தயாரிப்புக்கான நேரத்தை 50% வரை குறைத்துள்ளது.
கேப்டன் விஜய்காந் திரைப்பட சம்பவம்; உயிரிழந்த நபருக்கு உணவு கட்டணம்: மருத்துவமனைக்கு ரூ.65.62 லட்சம் அபராதம்
மேலும் இலங்கைப் பொருளாதாரத்தில் வாகனத் துறையின் பங்கு, இறக்குமதி மற்றும் பதிவு தரவுகள், எரிபொருள் வகை சார்ந்த சந்தைப் போக்குகள் மற்றும் இத்துறையின் எதிர்கால வாய்ப்புகள் குறித்த விரிவான தகவல்களை இந்த அறிக்கை உள்ளடக்கியுள்ளது.