குடும்பங்களுக்கான கடன்கள் 25.4 சதவீதத்தால் அதிகரிப்பு ; மத்திய வங்கியின் அறிவிப்பு
நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில், குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களின் அளவு 25.4 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடும்பங்களுக்கான கடன்
கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் குடும்பங்களுக்கான கடன் அதிகரிப்பு 15 சதவீதத்துக்கும் குறைவாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பங்களுக்கான மொத்தக் கடன்களில் 49 சதவீதத்துக்கும் அதிகமான பங்கு மேல் மாகாணத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதி வசதிகள் மற்றும் தங்கத்தை அடகு வைத்து பெறப்படும் கடன்கள் ஆகியவை முக்கிய இடத்தைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.