மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசை!
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தீர்மானம் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அண்மையில் பணம் செலுத்தி எரிபொருள் பெற்றுக்கொள்ள வேண்டும் என பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்திருத்தது.
எவ்வாறாயினும், கிவ்.ஆர் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் நாளாந்தம் வழங்கப்படும் பெற்றோல் மற்றும் டீசல் தொகையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அந்த சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வங்கி கணக்குக்கு பணம் வைப்பு செய்வதில் தாமதம் ஏற்படுவதன் காரணமாக சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் தாமதம் நிலவுவதாகவும் இதனால மக்கள் மீண்டும் வரிசையில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.