நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செயலுக்கு முகநூலில் குவியும் பாராட்டுக்கள்!
இலங்கையில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ள நிலையில் இதனால் மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
நாட்டில் அனைத்து பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைங்களுக்கு முன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதனிக்க முடிகிறது.
இந்த நிலையில் யாழ். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு ஒட்டோவில் குழந்தைகளுடன் செல்லும் போது எரிபொருள் தீர்ந்த நிலையில் பூநகரி வீதியில் நின்று சிலர் தவித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக சென்றுக்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (Selvarajah Kajendren) தனது மோட்டார் சைக்கிளிலிருந்து பெற்றோலை எடுத்து அவர்களிடம் கொடுத்துள்ளார்.
இதனை நேரில் கண்ட நபரொருவர் புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிட்டது மட்டுமில்லாமல் அவரது செயலை பாராட்டியும் வருகின்றனர்.
