இலங்கையில் கோட்டாபயவுக்கு எதிராக போராட்ட களத்தில் சுற்றுலாப் பயணிகள்!
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் இன்றையதினம் திங்கட்கிழமை (11-04-2022) இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

அம்பலாங்கொட பகுதியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு (Gotabaya Rajapaksa) எதிராக இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறையால் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை என சுற்றுலாப் பயணிகள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

