இலங்கையில் முதன்முறையாக திறந்து வைக்கப்பட்டுள்ள தொழிற்சாலை!
இலங்கையில் முதன் முறையாக மின்சார முச்சக்கர வண்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை மருதானை புகையிரத திணைக்கள களஞ்சிய வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலேயே முழுமையாக உற்பத்தி செய்யப்படும் Vega நிறுவனத்தின் ELEKTRATEQ முச்சக்கர வண்டியின் முழு உற்பத்தி செயல் முறையும் இந்த தொழிற்சாலை வளாகத்திலேயே மேற்கொள்ளப்படுகிறது.
குறித்த தொழிற்சாலையில், மிக நவீன தொழில்நுட்பத்தில் தானாக இயங்கும் தகடுகளை கட்டிங் மற்றும் மடிப்பு இயந்திரங்கள், பேட்டரி உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இது தவிர பெற்றோலில் இயங்கும் முச்சக்கரவண்டியை 2 மணித்தியாலத்திற்குள் மின்சாரமாக மாற்றுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் இந்தத் தொழிற்சாலை கொண்டுள்ளது என்பது ஒரு சிறப்பம்சமாகும்.