செவ்வந்தியுடன் கைதான யாழ் தக்ஷிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்திக்கு உதவியதாகவும், அவருக்கு உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படும் நான்கு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் இன்று (26) முன்னிலையான போது கொழும்பு நீதவான் லஹிரு சில்வா இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இஷாரா செவ்வந்தியைப் போன்ற தோற்றமுடையதாக காணப்பட்ட நந்தகுமார் தக்ஷி உட்பட நான்கு சந்தேகநபர்களை பெப்ரவரி 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
சந்தேகநபர்கள் கொழும்பு குற்றப்பிரிவால் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.