இலங்கை தொடர்பான இறுதி வரைவு ஜெனீவாவில் சமர்ப்பிப்பு!
ஐநா மனித உரிமைகள் பேரவையில் ஐக்கிய இராச்சியம் தலைமையிலான முக்கிய நாடுகள், இலங்கை தொடர்பான இறுதி வரைவை முன்வைத்துள்ளன.
30 நாடுகள் இணை அனுசரணை
30 நாடுகளின் இணை அனுசரணையுடன் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, கனடா, ஜேர்மனி ஆகிய நாடுகள் இணைந்து இந்த வரைவை முன்வைத்துள்ளன.
எனினும் இலங்கை அதனை எதிர்க்கும் என்றும் வரைவிலுள்ள சர்வதேச நாடுகளின் தலையீடு தொடர்பான 8 ஆவது சரத்துக்கு எதிராக செயற்பட்டு நிற்கும் எனவும் இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
வாக்கெடுப்பு நாளைய தினம் இலங்கை தொடர்பான இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாளைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கை தொடர்பான இறுதி வரைவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதை இன்று நாடாளுமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டி உரையாற்றினார். இதன்போது அவர் கூறுகையில்,
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் வழக்கு
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிரான வழக்கு நேற்று புத்தளம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்டத்தரணி ஹிஜாஸுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும், சட்டமா அதிபர் சார்பில் எவரும் வழக்கில் முன்னிலையாகியிருக்கவில்லை. அவருக்கு எதிராக சாட்சியங்களை சமர்பிக்க முடியவில்லையாயின், அவரை விடுவியுங்கள்.
காரணம் இல்லாமல் அவரை தடுத்துவைக்க முடியாது. அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை செய்ய முடியவில்லையாயின் அவரை விடுதலை செய்யுங்கள். இவ்வாறு செய்வது இலங்கை மீதான குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என்றார்.