வெளிநாடுகளில் உள்ள தூதரகங்களை மூட இலங்கை முடிவு!
டிசம்பர் 31 ஆம் திகதி முதல் வெளிநாடுகளில் உள்ள தெரிவு செய்யப்பட்ட இலங்கைத் தூதரகங்கள் மற்றும் துணை தூதரகங்களை தற்காலிகமாக மூட தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய நைஜீரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், ஜேர்மனி மற்றும் சைப்ரஸில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகங்களே இவ்வாறு தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக மூடுவதற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், நைஜீரியாவின் அபுஜாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், ஜேர்மனியின் பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் மற்றும் சைப்ரஸின் நிக்கோசியாவில் உள்ள இலங்கையின் துணைத்தூதரகம் போன்ற வெளிநாடுகளில் உள்ள மூன்று தூதரகங்களே இவ்வாறு மூடப்படவுள்ளன.
மேலும், அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்ற இந்தத் தீர்மானமானது, வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுவரும் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பணிமனைகளின் வலையமைப்பின் மறுசீரமைப்புச் செயன்முறையின் ஒரு பகுதி என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.