ஆசியளவில் முதலிடம் பிடித்த இலங்கை! எதற்கு தெரியுமா? ஆய்வில் வெளியான தகவல்
ஆசியாவிலேயே அதிக மின் கட்டணத்தை செலுத்தும் நாடாக இலங்கை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளதாக Verite Research நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தெற்காசியாவில் உள்ள ஏனைய நாடுகளின் உள்நாட்டு மின்சாரக் கட்டணத்தை விட இலங்கையின் உள்நாட்டு மின்சாரக் கட்டணம் 2.5 முதல் 3 மடங்கு அதிகம் என பகுப்பாய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக அந்த த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, பாகிஸ்தான் இரண்டாவது அதிக மின் கட்டணத்தைக் கொண்டுள்ளதாகவும் ஆனால் இலங்கையை விட கட்டணம் மிகக் குறைவு என்று குறித்த ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில், பெப்ரவரி, ஜூலை மற்றும் ஒக்டோபர் மாதங்களில் இலங்கை தனது மின்சாரக் கட்டணங்களை மூன்று முறை திருத்தியது.
மின்சாரம் வழங்குவதற்கான முழு செலவையும் திரும்பப் பெறுவதே அதிகரிப்புக்குக் கூறப்பட்ட அடிப்படையாகும்.