சிங்களவர்களிடம் எப்படி இருந்த கோட்டபாய இப்படி ஆகிற்றாரே?
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி சிங்கள மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன்னர் வரை தமது மீட்பராக போற்றப்பட்டு வந்த ராஜபக்ஷர்களை மிகவும் அசிங்கமாக திட்டும் நிலைக்கு சிங்களவர்கள் மாறி விட்டார்கள்.
30 வருட போரினை நிறைவு செய்த பெருமை ராஜபக்ஷர்களை சாரும் என்பது அவர்களின் நம்பிக்கையாகும். இந்நிலையில் கோட்டபாயவை தமது நெஞ்சில் சுமந்து திரிந்தனர் சிங்களவர்கள்.
சிங்கள இளைஞர்கள் மத்தியில் ஹீரோவாக தென்பட்ட கோட்டபாயவை நெஞ்சில் பச்சை குத்தி பெருமைப்பட்டனர். இன்று அந்த நிலைமை மாறி கோட்டாபயவை கொடூரமானவராக காட்டும் வகையில் பச்சை குத்தும் நிலை மாறியுள்ளது.
இளைஞர் ஒருவர் அன்றும் இன்றும் கோட்டாபவை பச்சை குத்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

