ஹோட்டலில் தங்குமிடம் கோரும் எம்.பிக்கள்! எதனால் தெரியுமா?
இலங்கையில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வருகின்றது.
இந்த நிலையில் எரிபொருள் எரிவாயு போன்றவற்றின் தட்டுப்பாடுகாரணமாக பல்வேறு துறைசார் செயற்பாடுகளும் முற்றாக ஸ்தம்பிதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.
நாட்டின் இவ்வாறான நிலையில் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக ஹோட்டல் தங்குமிடங்களை வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) இன்று (19-05-2022) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கொழும்பிற்கு வெளியில் இருந்து வருகை தந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடு திரும்ப விரும்பியதாகவும், எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அதனைச் செய்ய முடியாமல் போனதாகவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
“எனவே, அவர்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்காக கொழும்பில் தங்குவதற்கு ஹோட்டல் ஒன்றை முன்பதிவு செய்யுமாறு என்னிடம் கோரியுள்ளனர்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்