சொந்த ஊரில் சவப் பெட்டியில் ஊர்வலம் போன அமைச்சர் நஸீர் அஹமட்!
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிசின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அஹமட் புதிய அமைச்சரவையில் பொறுப்பேற்றமைக்கு அவரது சொந்த ஊரான ஏறாவூரில் மக்கள் எதிர்ப்பு வெளியிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
நேற்று இரவு இவ்வாறு ஏறாவூர் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். போராட்டத்தில் அமைச்சரின் உருவப்படம் தாங்கிய பதாகைக்கு நாணையத்தாள்களின் மாலை இடப்பட்டு, பின்னர் பெட்டி ஒன்றின்மீது வைத்து வீதியில் வலம்வந்து ஆர்ப்பாட்டக்காரர்கள், நஸீர் அஹமட் ஒழிக என கோசமிட்டு, பின்னர் அதனை எரித்துள்ளனர்.
நாட்டுமக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தற்போதைய அரசில் அமைச்சுப் பொறுப்பை ஹாபீஸ் நஸீர் அஹமட் ஏற்றுக் கொண்டிருக்கக்கூடாது என மக்கள் விசனம் வெளியிட்டனர்.