கொழும்பில் நான்கு அழகிய நடிகைகளுடன் மோசமான செயலில் ஈடுப்பட்டு வந்த ஐவர்!
இலங்கையின் தலைநகரில் பணத்துக்காக அழைத்துச் செல்லப்பட்ட நான்கு அழகிய நடிகைகளுடன் போதைப்பொருள் விருந்து நடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டதாக மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் கொழும்பு புறநகரப்பகுதியான படோவிட்டவில் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர்களில் படோவிட்ட பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் மகன்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தே கநபர்களுடன் 600 மில்லி கிராம் ஹஷிஸ் போதைப்பொருள் மற்றும் மூன்று இனந்தெரியாத போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேல்மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.