தமிழக முதலமைச்சர் விஜய்க்கு பிரித்தானியாவிலிருந்து வந்த கடிதம் ; ஈழத் தமிழர்கள் தொடர்பில் குறிப்பிட்டிருந்த விடயம்
ஈழத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளின் அடிப்படையில் அவர்களது அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி தமிழக அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தாம் தயாராக இருப்பதாக பிரித்தானிய நாடாளுமன்றத்தின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயிடம் கடிதம் மூலம் உறுதியளித்துள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் முறையே தலைவர் மற்றும துணைத்தலைவருமான டேம் சியோபியன் மெக்டோனா மற்றும் உமா குமரன் ஆகியோர் அண்மையில் நடைபெற்றுமுடிந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்று தமிழக முதலமைச்சராகத் தெரிவாகியுள்ள ஜோசப் விஜய்க்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது

தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றதற்கும், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் உங்கள் கட்சி பெற்ற வெற்றிக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நீங்கள் இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டிருப்பது தமிழ்நாட்டு மக்கள், இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் வரலாற்றில் ஒரு முக்கியத் தருணத்தைக் குறிக்கிறது.
உங்களது தலைமைத்துவம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தும் என்றும்இ அனைத்து சமூகங்களினதும் நலனை மேம்படுத்தும் என்றும் நாம் உறுதியாக நம்புகிறோம். பிரித்தானியாவில் வாழும் தமிழ் புலம்பெயர் சமூகம் தமிழ்நாட்டுடன் ஆழமான மற்றும் நிலையான தொடர்பைக் கொண்டுள்ளது.
கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தவும்இ ஈழத் தமிழர்களின் நியாயமான கோரிக்கையின் அடிப்படையில் அவர்களது அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தவும், பரஸ்பர புரிதலை மேம்படுத்தவும் நாம் உங்கள் அரசாங்கத்துடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கு எதிர்பார்த்திருக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.