கடனை செலுத்த தவறும் அபாயமுள்ள நாடாக மாறும் இலங்கை!
கடனை திருப்பிச்செலுத்த தவறும் அபாயமுள்ள நாடாக இலங்கையை, Standard and poor’s (S&P) சர்வதேச நிதி தரப்படுத்தல் நிறுவனம், தெரிவு செய்யப்பட்ட பெயரிட்டுள்ளது.
அத்துடன் 2023 ஆண்டு முதல் 2028ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முதிர்ச்சியடையவுள்ள இறையாண்மை முறிகளுக்கான வட்டியை செலுத்துவதற்கு வழங்கப்பட்ட 30 நாள் கால அவகாசம் முடிவடைந்த பின்னரும் அதனை செலுத்தத் தவறினால் தரப்படுத்தரில் D மட்டம் வரை இலங்கை தரமிறக்கப்படலாம் என ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.
D மட்டம் என்பது கடனை செலுத்தத் தவறும் அபாயமுள்ள நாடு என்பதையே குறிக்கின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த காலப்பகுதிக்குள் இலங்கை அந்த வட்டியை செலுத்தும் என எதிர்ப்பார்க்க முடியாது என Standard and poor’s நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மைக் காலமாக முடீஸ், பிட்ச், Standard and poor’s ஆகிய நிறுவனங்கள் தொடர்ச்சியாக கடன் தரப்படுத்தலில் இலங்கையை தரமிறக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.