நெருக்கடிக்குள் சிக்கி தவிக்கும் இலங்கை: உதவ முன்வந்த இந்திய யாசகர்!
தூத்துக்குடியில் யாசகம் எடுத்து தனது பகுதியிலுள்ள பாடசாலைகளுக்குத் தேவையான தளவாட பொருட்களை நபரொருவர் வாங்கி கொடுத்து வந்துள்ளார்.
ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த 50 வயதான பூல்பாண்டி என்ற நபரே இவ்வாறு யாசகம் எடுத்து இந்த நெகழ்ச்சி செயலை செய்து வந்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுமுடக்கம் அமுல்படுத்தப்பட்டது.
இதனால் அவரால் தூத்துக்குடிக்குத் திரும்ப முடியவில்லை. மதுரையிலேயே தங்கி விட்டார். யாசகம் எடுக்கும் பணத்தில், கொரோனா நிவாரண, முதலமைச்சரின் நிதிகளுக்கு 51 தடவைகளாக ரூ.5 இலட்சத்து 10 ஆயிரம் வழங்கியுள்ளார்.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளன்று ஏழைகளுக்கு உதவி செய்வதற்காக நிதி வழங்கலாம் என்று 50 ஆயிரம் ரூபாவுடன் 52ஆவது தடவையாக வந்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், (M.K.Stalin) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதனால், அந்த பணத்தை முதலமைச்சர் நிதிக்கு வழங்கிவிட்டேன். இது இலங்கை தமிழர்களுக்கு சென்றடைய வேண்டும்” என்றார்.