நாட்டின் மீது நம்பிக்கை இல்லை! இலங்கையின் பரிதாப நிலை
கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) உட்பட அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் தற்போது காணப்படும் அரசியல் சூழ்நிலையில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு, இலங்கை தொடர்பாக எவ்வித நம்பிகையும் ஏற்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella) கூறியுள்ளார்.
இன்றைய தினம் (26-05-2022) எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
சர்வதேசம் அங்கீகரிக்கக் கூடிய அரசாங்கம் ஒன்று இலங்கையில் ஆட்சியில் இருப்பது அவசியம். தற்போது அரசாங்கம் பதவி விலக வேண்டும்.
எந்த அரசாங்கம் எதிர்க்கட்சியிடம் இருந்து தீர்வை வழங்குமாறு கோரும்? அரசாங்கம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியிடம் தீர்வை கோருகிறது.