இலங்கைக்கு மேலுமொரு நெருக்கடி: வெளிநாடுகளில் பணமாற்று நிறுவனங்கள் நடவடிக்கை
இலங்கை ரூபாவை கொள்வனவு செய்வதை வெளிநாடுகளில் பணமாற்று நிறுவனங்கள் நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் அந்நிய செலாவணி விற்பனையாளர்கள் இலங்கை ரூபாயை வாங்குவதை நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 319 ரூபா 20 சதமாகவும், விற்பனை பெறுமதி 329 ரூபா 99 சதமாகவும் பதிவாகியுள்ளது.
எனினும், கறுப்பு சந்தையில் அதிக விலைக்கு டொலர் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான நிலையிலேயே வெளிநாட்டு பணமாற்று நிறுவனங்கள் இலங்கை ரூபாவை கொள்வனவு செய்வதை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.