இலங்கைக்காக சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுத்த அவுஸ்ரேலிய வீரர்கள்!
தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பாதிப்புக்களை சந்தித்து வரும் இலங்கையர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களான மிட்செல் ஸ்டாக் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்கள்.
ஐ.நா அமைப்பின் இலங்கைப் பிரதிநிதிகள் குழு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நிதி திரட்டும் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறு உலகெங்கிலும் உள்ள தமது ரசிகர்களை அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதேவேளை இந்த நிதி திரட்டும் பிரச்சாரம் ஜூன் மாதம் தொடங்கிய நிலையில் எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் 47.2 மில்லியன் டொலர்களை திரட்டுவது இதன் இலக்காகும் எனவும்,
இந்த நிதி இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது.