இலங்கை கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்த சஜித்!
கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (21) கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்திய அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 4 ஓட்டங்கள் வித்தியசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது.
இலங்கை அணி இன்றைய வெற்றியால் 3 -1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் நீண்ட காலத்திற்கு பிறகு தொடரை கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமது வாழ்த்துக்களை தெரிவித்து ருவிட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.
Amidst one of the most challenging times in our country, cricket brings an overwhelming sense of happiness. A sincere congratulations to the talented Sri Lankan cricket team on winning the ODI series. pic.twitter.com/k8IP1HaJl9
— Sajith Premadasa (@sajithpremadasa) June 21, 2022
குறித்த பதிவில், நம் நாட்டில் மிகவும் சவாலான காலகட்டங்களில் ஒன்றின் மத்தியில், கிரிக்கெட் ஒரு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.
ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என அதில் குறிப்பிட்டுள்ளார்.