மீண்டும் ஆபத்தை நோக்கி இலங்கை: வெளியான அதிர்ச்சி தகவல்
கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த 4 மாத காலமாக ஒப்பீட்டளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஓமிக்ரோன் திரிபு தாக்கத்தின் பின்னர் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது சடுதியாக அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது.
இம்மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து Covid19 தொற்றாளர்களின் எண்ணிக்கை சுமார் 800 ஆக காணப்பட்ட நிலையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை கட்டம் கட்டமாக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கடந்த செப்டெம்பர் மாதத்திற்கு பின்னர் நேற்று (26-01-2022) கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 927 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கடந்த 8 நாட்களுக்குள் மாத்திரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை அண்மித்துள்ளமை அவதானத்திற்குரியது.
கொரோனா வைரஸ் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் முழுமையாக தளர்த்தப்பட்டமை, மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்வதை பொது மக்கள் புறக்கணித்து வருகின்றமை Covid19 வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைவதற்கு பிரதான காரணியாக உள்ளது என பொதுசுகாதார சேவை சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.