IMF பொறிக்குள் சிக்கிய இலங்கை; சரத் வீரசேகர!
சர்வதேச நாணய நிதியத்தின் பொறிக்குள் இலங்கை சிக்குண்டுள்ளது. கடுமையான நிபந்தனைகளை முழுமையாக செயற்படுத்தினால் சமூக கட்டமைப்பில் அமைதியின்மை நிலவுவதுடன் அரசியல் நெருக்கடி தீவிரமடையும். வங்குரோத்து தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.
அதன்படி தொடர்ந்து தெரிவித்த அவர்,
வங்குரோத்து நிலை என அறிவித்ததை தொடர்ந்து சர்வதேச கடன் வழங்குநர்கள் இலங்கைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார்கள்.
சீனா இந்தியா ஆகிய நாடுகள் வழங்க தீர்மானித்திருந்த நிதியுதவிகளை இடைநிறுத்தின மறுபுறம் அதுவரை முன்னெடுக்கப்பட்ட வெளிநாட்டு அபிவிருத்தி செயற்திட்டங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டன.
இவ்வாறான நிலையில் இலங்கைக்கு கிடைக்கப் பெறவிருந்த அனைத்தும் இடைநிறுத்தப்பட்டன. இந்நிலையில் நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்வதற்காக கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் பொறிக்குள் இலங்கை சிக்குண்டுள்ளது.கடுமையான நிபந்தனைகளை முழுமையாக செயற்படுத்தினால் சமூக கட்டமைப்பில் அமைதியின்மை நிலவுவதுடன் அரசியல் நெருக்கடி தீவிரமடையும்.