தேசிய ரீதியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த மாணவர்களுக்கு குவியும் வாழ்த்துகள்!
அகில இலங்கை கர்நாடக சங்கீத (தேசிய மட்டம்) வீணை வாசித்தல் போட்டியில் முதலாம் இடங்களை இடைநிலைப் பிரிவில் மாணவி செல்வி மு.கதுர்ஷணா அவர்களும் மேற்பிரிவில் சி. மாதங்கி அவர்களும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
குறித்த இரு மாணவிகளும் முதல் இடத்தினை பெறுவதற்கு தனது அயராத அற்பணிப்புடன் பயிற்றுவித்த திருமதி மதுமிதா பிரதீபன் ஆசிரியை அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன்,
அநூராதபுரத்தில் நடைபெற்ற இப் போட்டியில் கலந்துகொள்ள வாகன வசதியினை ஏற்படுத்தி தந்ததுடன் ஊக்கமும் வழிகாட்டலும் வழங்கிய வலயக்கல்விப்பணிப்பாளர் அவர்களுக்கும் மற்றும் அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளருக்கும் பாடசாலைச் சமூகம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என இலங்கை நாடாளுமன்றத்தில் தனிப்பட்ட செயலாளர் Janathan Alfred முகநூலில் பதிவிட்டுள்ளார்.