அமைச்சரவையில் மொட்டு கட்சிக்கு உரிய இடம் கிடைக்க வேண்டும்!
செயற்பாட்டு அரசியலுக்கு வருவது தொடர்பில் iஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே (Gotabaya Rajapaksa) முடிவெடுக்க வேண்டும். அதற்கான சுதந்திரம் அவருக்கு உள்ளது.
மேலும், கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் நாடு திரும்புவார்.” இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.
அதாவது கொழும்பில் நேற்றைய தினம் (22-08-2022) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்குமாறும், அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பிலும் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தியுள்ளோம்.
குறிப்பாக, நாடு திரும்பும் ஜனாதிபதி, அரசியலுக்கு வருவாரா என்பது குறித்து எனக்கு அறிவிக்க முடியாது. அது தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கே உள்ளது.
அதேவேளை, மொட்டு கட்சிக்கு உரித்தான அமைச்சு பதவிகள் உரிய வகையில் கிடைக்கப்பெற வேண்டும். அது தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.