இலங்கையில் அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!
நாட்டில் இந்த முறைஇ வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 20 இலட்சம் பேருக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், நாட்டிலுள்ள 14 இலட்சம் அரசாங்க ஊழியர்கள் மற்றும் 6 இலட்சம் ஓய்வூதியம் பெறுவோருக்கும் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
இது குறித்து நிதி அமைச்சு வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி தெற்கு ஊடக ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
அரசாங்க ஊழியர்களுக்கு மட்டுமன்றி அஸ்வெசும திட்டத்தின் ஊடாக நலன் பெறும் 10 இலட்சம் பேருக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சம்பள உயர்வு சில கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளின் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள இந்த நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நாளை (13-11-2023) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.