முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய தீர்மானம்
ஐந்து வருடம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் புதிய அஞ்சல் காரியாலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனை குறிப்பிட்டார்.
கடந்த 30 வருடங்களாக அரச சொத்துக்களையும், இடங்களையும், அனுபவித்து வந்த தலைவர்கள், தற்போதே அவர்களுடைய சொந்த வீடுகளுக்கு சென்றுக் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும், எதிர்க்கட்சியினரும் கூறி வருவதாக நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
எனினும், அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக பொருளாதாரம் வளர்ச்சி அடைந்திருப்பதை தாம் மக்களுக்கு காட்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.