குடிபோதையில் வந்த கணவன்: மனைவியின் கொடூர செயல்! நேர்ந்த சோகம்
குருவிட்ட பகுதியில் மனைவியால் கோடரியால் தாக்கப்பட்டதில் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை (08-01-2022) குருவிட்ட, கந்தலந்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த தாக்குதலுக்கு இலக்கான 34 வயதான நபர் இரத்தினபுரி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு இருந்த வேளை சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, உயிரிழந்த நபர் குடிபோதையில் தனது மனைவியை தினமும் தாக்குதவாகவும், அந்த சந்தர்ப்பங்களில் மனைவி மற்றும் குழந்தைகள் அயல் வீட்டில் தஞ்சமடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு குடிபோதையில் கூரிய ஆயுதம் மற்றும் அமிலத்துடன் வீட்டுக்கு வந்த கணவன் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதேவேளை கோடரி ஒன்றால் கணவனை மனைவி தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் தாக்குதல் மேற்கொண்ட 31 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.