தேயிலை விலையில் சாதனைப் புரிந்த இலங்கை
பெப்ரவரியில் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்ததன் உலகளாவிய தாக்கம் இருந்த போதிலும், இலங்கை தேயிலையின் விலை ஏலத்தில் 725 ரூபாவாக உயர்ந்தது.
ஜனவரி மாதத்தில் ரஷ்யா "சிலோன் தேயிலை" இரண்டாவது பெரிய வாங்குபவர் ஆனது. எவ்வாறாயினும், தற்போதைய யுத்த சூழ்நிலை காரணமாக உலகளாவிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக கொழும்பை தளமாகக் கொண்ட தரகு நிறுவனமான Forbes & Walker தெரிவித்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் காரணமாக ரஷ்ய ரூபிள் 77ல் இருந்து 110 ஆகக் குறைந்துள்ளது.
வெளிநாட்டு நாணயத்தை நிலைப்படுத்த ரஷ்யா கடனுக்கான வட்டி விகிதத்தை 20 சதவீதமாக உயர்த்தியது. கடந்த மார்ச் மாதம் 01 ஆம் திகதி நடைபெற்ற ஏலத்தில் இலங்கை 4.98 மில்லியன் கிலோ தேயிலையை விற்பனை செய்துள்ளதுடன், கடந்த வாரம் 02. 6 மில்லியன் கிலோ தேயிலை விற்பனையாகியுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு 645.95 (3.33 USD) ஆக இருந்த தேயிலையின் விலை பிப்ரவரியில் 725.63 (3.60 USD) ஆக உயர்ந்தது. உயர்தர தேயிலைக்கான தேவை அதிகமாக காணப்பட்டதாகவும், தரம் குறைந்த தேயிலை மலிவாகவும், தேயிலையின் தரம் அதற்கேற்ப காணப்படுவதாகவும் சிலோன் டீ தரகர்கள் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
Forbes & Walker இன் படி, தேயிலையின் தரத்திற்கு ஏற்ப தேயிலையின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்படும் துறைகளில் தேயிலை தொழில்துறையும் ஒன்றாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.