இலங்கையில் பெரும் சோக சம்பவம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழப்பு!
அம்பேபுஸ்ஸ - அலவ்வ வீதியில் துல்ஹிரிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டியும் டிப்பர் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இன்றைய தினம் (12-06-2023) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 40 வயதுடைய நபர், அவரது 39 வயது மனைவி மற்றும் அவர்களது 13 வயது மகன் என பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பேபுஸ்ஸ பகுதியிலிருந்து அலவ்வ நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று எதிர்திசையில் பயணித்த டிப்பர் ரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ரம்புக்கனை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்த நிலையில் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதியான 39 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு வாகனங்களின் சாரதிகளின் கவனக்குறைவு காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.