ஊடகங்கள், மக்கள் முன்வரத் தயாரா... யாழில் இருந்து அர்ச்சுனா எம்.பிக்கு பகிரங்க சவால்!
யாழ்ப்பாண தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரத்தில் அர்ச்சுனா எம்பிக்கு, காணி உரிமைக்கான மக்கள் இயக்கத் தலைவர் முரளிதரன் பகிரங்கச் சவால் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் காணி உரிமைக்கான மக்கள் இயக்கத் தலைவர் முரளிதரன் குறிப்பிட்டுள்ளதாவது,

விகாரைக் காணி மக்கள் 18 பேருக்குச் சொந்தமானது
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்குப் பகிரங்கமாகப் பொது வெளியில் சவால் விடுக்கின்றேன். தையிட்டியில் தற்போது சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட விகாரைக் காணி மக்கள் 18 பேருக்குச் சொந்தமானது என்பதை நிரூபிக்கிறேன்.
உம்மால் முடிந்தால் பகிரங்க விவாதத்துக்கு ஊடகங்கள், மக்கள் முன்வரத் தயாரா? எனக் காணி உரிமைக்கான மக்கள் இயக்கத் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் பகிரங்க விவாதத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதேவேளை யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக 18 குடும்ப மக்களின் காணிகளை அடாத்தாக பிடித்து விகாரை அமைப்பட்டமைக்கு மக்கள் போராட்டங்களை முட்டுஎத்துள்ள நிலையில், தையிட்டி விகாரையை இடிக்க வேண்டு மென்றல் முதலில் நல்லூர் கோயிலை இடிக்க வேண்டும் என அர்ச்சுனா எம்பி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.