கொழும்பில் 23 இடங்களில் விசேட வெசாக் தோரணைகள்
விசாக பூரணை தினத்தை முன்னிட்டு கொழும்பின், 23 இடங்களில் விசேட தோரணைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒருகொடவத்தை, தொட்டலங்க, தெமட்டகொட, பொரளை, பேலியகொடை, கிரிபத்கொடை, கொட்டாவ, மஹரகம, பிலியந்தல, பெல்லங்வில ஆகிய பகுதிகளில் விசேட தோரணைகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசேட தோரணைகள்
அத்துடன் மொரட்டுவை, தெஹிவளை, மாலபே மற்றும் அதுருகிரிய உள்ளிட்ட பகுதிகளிலும் விசேட தோரணைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தை, லேக் ஹவுஸ் வீதி, கொழும்பு மாநகர சபை வீதி மற்றும் ஹுணுப்பிட்டிய கங்காராமை வீதி ஆகிய பகுதிகளிலும் விசேட விசாக பூரணை வலயங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில், தேசிய விசாக பூரணை வாரத்தை நுவரெலியாவில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், குறித்த நிகழ்வு இன்று ஆரம்பமாகியுள்ளது. இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்தநிலையில், விசாக பூரணை தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12,13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இறைச்சி விற்பனை நிலையங்கள், களியாட்ட விடுதிகள் மற்றும் சூதாட்ட நிலையங்கள் உள்ளிட்டவை மூடப்படவுள்ளன.