சம்பந்தனின் இறுதிக்கிரியைக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள்
சம்பந்தனின் இறுதிக்கிரியையில் கலந்து கொள்வதற்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட இறுதி அஞ்சலி நிறைவின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிலையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று காலை மார்டின் வீதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு தொடர்ந்து தந்தே செல்வா அரங்கத்திற்கு எடுத்து வரப்பட்டது
இந்நிலையில் சம்பந்தனின் பூதவுடல் நாளை காலை 6 மணியளவில் விமானம் மூலம் எடுத்து செல்லப்பட்டு 9.30 மணிமுதல் இறுதி அஞ்சலிக்காக அன்னாரது இல்லத்தில் வைக்கப்படும்.
தொடர்ந்து ஞாயிற்று கிழமை அன்னாரது இல்லத்தில் மதியம் இறுதி கிரியை இடம்பெற்று உடல் தகனம் செய்யபடும்.
இதேவேளை மறைந்த பெருந்தலைவர் சம்பந்தனின் இறுதி அஞ்சலிக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உரியவர்களிடம் தொடர்பு கொண்டு அஞ்சலியில் கலந்து கொள்பவர்கள் இது குறித்து மேலதிக விபரங்களை பெற்று கொள்ளலாம்
இதேவேளை இன்று யாழ் மாவட்டத்தில் பொதுமக்கள் பலர் திரட்சியான அஞ்சலியில் கலந்து கொண்டனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.